டான் என்ற வார்த்தைக்கான விளக்கத்தை (Dan Meaning In Tamil) தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் உங்களை வரவேற்கிறோம், மேலும் இந்த வார்த்தையை பற்றிய விளக்கங்களும், உதாரணமும் உங்களுக்கு தெளிவாக கொடுக்க இந்த கட்டுரை முன்வந்துள்ளது.
காரணம் ஒரு தகவலை தெரிந்து கொள்வதற்கு முன்பு அது சம்பந்தமான கூடுதல் விவரங்களை தெரிந்து இருக்க வேண்டியது அவசியம், அதுவும் பேசும் வார்த்தையை பொருத்தவரை முழுமையான அர்த்தத்தை தெரிந்து கொண்டு பிறரிடம் பேச வேண்டும்.
உண்மைதான், இல்லை என்றால் தேவையில்லாத சிக்கல்கள், மன வருத்தங்கள், உறவுகளுக்குள் பிரிவு போன்றவை ஏற்படும். ஆகையால் ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தத்தையும், அந்த வார்த்தை சூழலுக்கு தகுந்தவாறு வேறு அர்த்தம் கொள்வதையும் புரிந்து கொண்டு பேச வேண்டும். எனவே இந்த டான் வார்த்தைக்கான முழு விளக்கத்தை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
Dan என்றால் என்ன?
இது எந்த ஒரு மொழியையும் சார்ந்த வார்த்தை என்று நாம் அவ்வளவு எளிதில் கூறி விட முடியாது, காரணம் பெரும்பாலும் இதை அனைவருமே பயன்படுத்துகின்றனர்.
மேலும் தற்போது உள்ள காலத்தில் அனைவருமே தங்கள் தாய் மொழியுடன் ஆங்கிலத்தில் இணைத்து பேசுகின்றனர், மேலும் லோக்கல் லாங்குவேஜ் என்று கூறக்கூடியது சில குறிப்பிடப்படாத எழுத்துக்களையும் (வார்த்தைகளையும்) இணைத்து பேச துவங்கி விட்டனர்.
அந்த வகையில் தான் Dan (டான்) வார்த்தையானது ஒரு குழுவில் இருக்கும் தலைவரை குறிப்பிடக் கூடியதாக இருக்கின்றது. உதாரணத்திற்கு பத்து நபர்களுக்கு ஒரு தலைவர் இருந்தால் அந்த தலைவரை டான் என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்த விஷயத்தை தெளிவாக கூற வேண்டும் என்றால் பள்ளியில் 10 நபர்கள் இருப்பார்கள், அல்லது கல்லூரியில் 10 நண்பர்கள் (இளைஞர்கள்) இருப்பார்கள், அந்த பத்து நபர்களும் ஒருவரின் பேச்சை கேட்பார்கள், அவரையே தலைவராக கருதுவார்கள்.
இப்படி உள்ள சூழலில் அந்த நண்பர்களுக்கிடையே இருக்கும் ஒரு சக்தி வாய்ந்த நபரோ, அல்லது புத்திசாலியான நபரோ இருப்பர் அவர் அவர்களுக்கு கட்டளையிடுவார், அவரை குறிப்பிடுவதற்காக டான் என்று குறிப்பிடுவார்கள்.
ஒத்துப் போகும் சொற்கள்:
- தலைவர்
- முதலாளி
- முதல்வர்
- டான்
- கட்டுப்படுத்துபவர்
- கட்டளை இடுபவர்
- அனைவருக்கும் முதல்வர்
- பெரியவர்
இது போன்ற பல வார்த்தைகள் மூலம் அழைக்கப்படுகிறார் கூட்டத்தில் உள்ள ஒரு முதல்வர் (டான்) மேலும் சண்டையிடும் ரவடிகளுக்கு இடையே இந்த வார்த்தை அதிக அளவு குறிப்பிடப்படும் வார்த்தையாக இருக்கும்.
Dan Meaning In Tamil with Example
உதாரணத்திற்கு ஒருவரை நீங்கள் கோபத்தில் திட்டும்போது நீ என்ன பெரிய டானா என்று கேட்பதற்கு வாய்ப்பு உள்ளது, அப்படி என்றால் என்ன அர்த்தத்தை குறிக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
அதாவது டான் என்றும் ஒருவரை குறிப்பிடும் போது அவர் மிகப்பெரிய பலசாலியாகவும், பலரை எதிர்த்து சண்டையிட கூடிய சக்தி பெற்றவராகவும், அல்லது பெரிய பதவியில் இருப்பவராகவும் கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dan நல்ல வார்த்தையா?
நல்ல கேள்வி! இந்த (Dan) விஷயத்தை நீங்கள் நண்பர்களுக்கிடையே பேசும்போது அது நகைச்சுவை உணர்வை தூண்டும், அல்லது உறவுகளுக்குள் பேசும்போதும் நகைச்சுவை உணர்வை தூண்டும்.
ஆனால் முன்பின் தெரியாத நபர்களிடம், அனுபவம் இல்லாதவர்களிடம் இது போன்ற வார்த்தையை பிரயோகிக்கும் போது அது தேவையில்லாத சிக்கலை உருவாக்குவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
ஆகையால் இந்த டான் வார்த்தை பேசுவதற்கு முன்பு யாரிடம் பேசுகிறீர்கள், எந்த தருணத்தில் பேசுகிறீர்கள் என்பதை தெரிந்து கொண்டு பேசுங்கள்.
கவனிக்க: இந்த வலைதள பகுதியில் உங்களுடைய முக்கியமான டான் என்றால் என்ன (Dan Meaning In Tamil) என்ற கேள்விக்கான முழு விளக்கத்தை உதாரணம் உங்களோடு வழங்கி இருப்போம் என்று நம்புகிறோம். மேலும் சந்தேகம் இருந்தால் தயக்கம் இன்றி எங்களிடம் கருத்து பட்டியல் கேளுங்கள் அதற்கான பதிலை விரைவில் அளிப்போம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
நண்பர்களுக்கிடையே உரையாடும்போது, ஒரு விஷயத்தை உன்னால் செய்ய முடியுமா நீ என்ன பெரிய டானா என்று கேட்பார்கள், அப்படி என்றால் நீ அவ்வளவு பெரிய சத்திசாலியா என்று பொருள்.
இது உறவுகளுக்குள் அல்லது நண்பர்களுக்குள் பேசும்போது ஒரு விளையாட்டான வார்த்தையாக கருதப்படும். ஆனால் அனுபவம் இல்லாத நபர்களிடம் இதை பிரயோகிக்கும் போது தேவையில்லாத சிக்கல்கள் (மனக்கஷ்டம்) ஏற்பட வாய்ப்பு உள்ளதுது.
இந்த டான் வார்த்தை பொறுத்தவரை கெட்ட வார்த்தை கிடையாது, இது சாதாரணமாக சினிமா காட்சிகளிலும் பேசப்படும் வார்த்தை.
ஆகையால் பொது இடங்களிலும், சினிமாக்களிலும், நண்பர்களுக்கு இடையிலும் பேசப்படும் ஒரு வார்த்தையாக இது இருக்கின்றது.
ஆகையால் இதனை தயக்கம் இல்லாமல் பயன்படுத்தலாம், ஆனால் சூழலுக்கு தக்கவாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
For most of your doubts, use
Dan Meaning in Tamil
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages