ஆங்கிலத்தில் கூறப்படும் இந்த Manglik என்ற வார்த்தையை திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பவர்களுக்கு அதிகம் கேட்கவும் (பார்க்கவும்) கிடைக்கும் ஒரு வார்த்தையாக இருக்கும்.
இந்த வார்த்தையானது ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது சில தோஷங்களை குறிப்பிடுகிறது, அதுவும் முக்கியமாக இந்த manglik எனும் வார்த்தை செவ்வாய் தோஷத்தை குறிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு ஜாதக கட்டத்தில் அடிப்படையிலும் செவ்வாய் தோஷம், ராகு தோஷம் போன்ற தோஷங்கள் கூறப்படுகிறது, அதன் அடிப்படையில் ஒரு பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ திருமணம் செய்யும் முடிவு எடுத்து ஜாதகம் பார்க்கும் போது அவர்களுக்குள் manglik மற்றும் anshik manglik என கூறப்படும் இந்த தோஷஇங்கள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.
Manglik | செவ்வாய் தோஷம் |

manglik dosh எதற்காக பார்க்கப்படுகிறது?
இந்த manglik தோஷத்தை பொருத்தவரை செவ்வாய் தோஷம் இருக்கின்ற மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்ற ஐதிகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் manglik dosh உள்ள ஒரு மாப்பிள்ளைக்கு manglik dosh ஜாதகம் உள்ள ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது, இந்த நம்பிக்கை இன்னும் சில இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
manglik dosha check என்றால் என்ன?
ஒருவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து அவருடைய ஜாதகத்தை பார்ப்பதற்காக செல்லும் போது அவருடைய ஜாதகத்தில் No manglik dosha என்று குறிப்பிடப் பட்டிருந்தால் அவருக்கு எந்தவிதமான செவ்வாய் தோஷமும் இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது என்று அர்த்தம்.
எனவே அவருக்கு தோஷங்கள் எதுவுமில்லை தாராளமாக எந்த பெண்ணை வேண்டு மானாலும் பொருத்தம் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
இருந்தபோதும் தோஷம் இருக்கின்றதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள பல இணையதளங்கள் வந்துவிட்டன, அப்படிப்பட்ட manglik dosha check தளத்தில் உங்களுடைய பிறந்த நேரம் மற்றும் தேதியை உள்ளிடும் போது அது தெரியும்.
மாங்கல்ய தோஷம், ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்கள் உள்ளதா என்ற கேள்வி வரன் தேடும் பல இணையதளங்களில் உங்களிடம் கேட்கப்படலாம்.
அப்படிப்பட்ட மேட்ரிமோனி தளங்களில் (manglik) தோஷம் இருக்கிறதா, இல்லையா என்பதை நீங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டி இருக்கும், அப்போதுதான் அந்த வலை தளமானது உங்களுக்கு பொருத்தமான வரன்களை காட்டும் காண்பிக்கும், இதனால் உங்கள் வரன் தேடும் நேரம் மிச்சப்படும், இதற்காகவே இந்த கேள்வி கேட்கப்படுகிறது.
ஜாதகம் மற்றும் தோஷங்களை நம்புவதும் பார்ப்பதும் அவரவர்களின் சொந்த விருப்பம் ஆகும், பல கருத்துக்கள் வலைதளங்கள் மூலம் பேசப்பட்டாலும் நேரில் கேட்க பட்டாலும் எந்த ஒரு விஷயத்தையும் நம்பும் மனிதர்களுக்கு மட்டுமே அதன் முக்கியத்துவம் தெரியும்.
அந்த வகையில் இந்த தோஷங்களை போக்குவதற்காக சில பரிகாரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த பரிகாரங்கள் அவரவர்களின் ஜாதகம் பொருத்தத்தின் அடிப்படையிலும், அவர்களின் கட்டங்களின் அடிப்படையிலும் செய்ய வேண்டி இருக்கலாம், இதனை உங்களுக்கு விருப்பமான மற்றும் நம்பிக்கையான ஜோதிடரிடம் சென்று நீங்கள் கேட்டறிதல் சிறந்ததாக இருக்கும்.
கவனிக்க: இந்த கருத்து எங்கள் தனிப்பட்ட கருத்து மட்டுமே இது எவர் மனதையும் புண்படுத்துவதற்காக கூறப்பட்டது அல்ல அப்படி ஏதேனும் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதை நீங்கள் கருத்துப் பெட்டியில் கூறலாம் அதன் அடிப்படையில் நாங்கள் இந்த வலைதள கட்டுரையை திருத்தம் செய்யவும் முன்வருவதும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
For most of your doubts, use
Manglik meaning in tamil

An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages