இன்றைய நாளில் உங்களுடைய முக்கியமான சந்தேகமான விளாக் மீனிங் இன் தமிழ் (vlog meaning in tamil) என்ற கேள்விக்கான பதில் முழுமையாக கிடைக்க உள்ளது. மேலும் நீங்கள் ஒரு விலாகராக விருப்பப்பட்டாலும் இந்த வலைதளம் உங்களுக்கு உதவும்.
அதாவது (travel vlog meaning in tamil) இப்படி கூறப்படும் வார்த்தைக்கான அர்த்தம் என்ன, இதனால் என்ன பலன், இதனால் பணம் சம்பாதிக்க முடியுமா, இதனால் சந்தோஷம் கிடைக்குமா, நீங்கள் ஒரு பிளாகர் ஆக முடியுமா என்று அனைத்து தகவலையும் இந்த ஒரே கட்டுரையில் நீங்கள் பார்க்க உள்ளீர்கள்.
ஆம் இது அதிக ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட vlog meaning கட்டுரை, மேலும் நாங்களும் இது சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது எங்களிடமும் YouTube சேனல், மற்றும் (Blogger) வலைதளம் உள்ளது. உண்மைதான், காரணம் அந்த வலைதளத்தில் இப்போது நீங்கள் படித்து பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள், இதுதான் வலைதளம்.
youtube vlog என்பது எங்களுடைய அனுபவங்களை பதிவிடக்கூடிய வீடியோ வலைதளம், இவை இரண்டிலும் நாங்கள் குறிப்பிடுவதற்கான காரணத்தை காரணத்தை நீங்கள் கட்டுரையில் பயணிக்கும்போது அறிவீர்கள், வாருங்கள் கட்டுரையில் தொடர்ந்து பயணித்து தகவலை பெறலாம்.
- vlogger ஆக என்ன தேவை?
- Vlog Video Tamil Ideas
- Vlogger-ஆகி உருவாக்குவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா?
- vlog வீடியோ மூலம் பணம் சம்பாதிக்கும் வழி எத்தனை?
- நீங்கள் ஒரு விலாகராக என்ன தேவை?
- விலாகராக மாற என்னென்ன பொருட்கள் தேவை?
- More Details for:
- யாரெல்லாம் Vlogger ஆவதற்கு தகுதியானவர்கள்?
- Vlog Definition and Example Pdf Download
“vlog” என்ற வார்த்தை பெரும்பாலும் வீடியோ வலைப்பதிவைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, அதாவது தனிநபர்கள் அல்லது உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் தங்கள் அனுபவங்கள், எண்ணங்கள் அல்லது தகவல்களை YouTube, Facebook போன்ற தளங்களில் வீடியோ வடிவத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள்.
தமிழில் “வீடியோ பதிவு” எனும் வார்த்தை ஆங்கிலத்தில் (“vlog” என்று உச்சரிக்கப்படுகிறது) அல்லது “வீடியோ வலைப்பேசல்” (“video chat” என உச்சரிக்கப்படுகிறது), அதாவது “வீடியோ பிளாக்கிங்” அல்லது “வீடியோ உள்ளடக்க உருவாக்கம்” . இந்தச் சொற்கள் பொதுவாக தமிழ் மொழியில் விவரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்பது உண்மை.
vlogger ஆக என்ன தேவை?
பொதுவாக நீங்கள் முதலில் vlogger ஆக வேண்டும் என்றால், ஏற்கனவே youtube வலைதளத்தில் vlog சேனல்களை பார்க்க வேண்டும், அப்போது அவர்கள் எவ்வாறு வீடியோவை உருவாக்குகின்றனர், எந்த விதத்தில் தங்களுடைய அனுபவத்தை பகிர்கின்றனர், மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாத வகையில் எப்படி எவ்வளவு பேசுகின்றனர்.
மற்றும் எவ்வாறு வீடியோ எடுக்கப்படுகிறது, எந்த அளவு எடிட்டிங் செய்யப்படுகிறது, அதில் எந்த வகையான விஷயங்கள் இணைக்கப்படுகிறது, எந்த விஷயங்கள் நீக்கப்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்தயும் தெரிந்துகொண்ட பிறகு நீங்கள் அதிலிருந்து எடுத்துக்கொண்ட விஷயங்களை வைத்து உங்கள் சொந்த முயற்சியில் உங்களுடைய அன்றாட அனுபவங்கள், சுற்றுலா செல்லும் இடங்கள், உங்களுடைய பழக்க வழக்கங்கள், அல்லது உங்களுக்கு தெரிந்த தனித்துவமான திறமை போன்ற அனைத்தையும் வீடியோவாக எடுத்து, அதில் சுவாரசியமான விதத்தில் (சலிப்பை ஏற்படுத்தாத வகையில்) பேசி, நல்ல முறையில் எடிட் செய்ய வேண்டும். பின்பு அதை நீங்கள் youtube, facebook போன்ற வலைதளங்களில் பதிவேற்றலாம்.
Vlog Video Tamil Ideas
தற்போது மிகப்பெரிய Vlog வீடியோவாக பதிவேற்றுவதை விட ஷார்ட் வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு வந்துவிட்டது, இது குறைவான நேரத்தில் தகவல்களை இணைக்க கூடியதாகவும், பிறர் பார்த்து ரசிக்க கூடியதாகவும் இருக்கிறது.
உதாரணத்திற்கு நீங்கள் பேஸ்புக் ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், youtube ஷார்ட்ஸ் போன்றவைகளை பார்த்திருக்கலாம், இவைகளில் பதிவேற்றக்கூடிய வீடியோக்களிலும் Vlog வீடியோக்கலுக்குள் அடங்குகின்றன.
அதாவது நீங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ அல்லது உணவருந்தும் வீடியோ என்று உங்களுடைய அன்றாட அல்லது அடிக்கடி செய்யக்கூடிய சுவையான மற்றும் நல்ல தருணங்களை Vlog short விடியோவாக நீங்கள் பதிவேற்ற முடியும். இதன் மூலமும் அதிக நபர்கள் உங்களைப் பின்பற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
Vlogger-ஆகி உருவாக்குவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா?
கட்டாயம் முடியும், தற்போது உள்ள காலத்தில் youtube, பேஸ்புக் போன்ற மிகப்பெரிய வலைதளங்களில் வீடியோ பதிவேற்றுவதன் மூலம் குறிப்பிட்ட அளவை நீங்கள் எட்ட முடியும்.
அதாவது நீங்கள் பணம் சம்பாதிப்பதற்காக குறிப்பிட்ட ஃபாலோவர்ஸ், சப்ஸ்க்ரைபர்ஸ் மற்றும் குறிப்பிட்ட வியூஸ், அல்லது வாட்ச் அவர் எனப்படும் பார்வை நேரத்தை நீங்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் எட்டி விட்டீர்கள் என்றால் உங்களுக்கு மானிடேஷன் எனப்படும் பணமாக்கும் முறை உங்களுக்கு கிடைக்கும்.
பின்பு அதைக் கொண்டு உங்கள் அனைத்து வீடியோக்களையும் விளம்பரங்களை காட்ட முடியும். அந்த விளம்பரங்களில் வரும் பணத்தை நீங்கள் அந்த சோசியல் மீடியா தளங்கலுடன் பங்கிட்டு கொள்ளலாம்.
உதாரணத்திற்கு facebook monetization, youtube monetization போன்ற வலைதளங்களுடன் இணைந்து monetization கிடைத்த பிறகு, நீங்கள் கிடைக்கும் விளம்பரத்தில் வரும் பணத்தை பங்கிட்டு கொள்ள முடியும், இதனால் பணம் சம்பாதிக்க முடியும்.
vlog வீடியோ மூலம் பணம் சம்பாதிக்கும் வழி எத்தனை?
முதல் வழி: உதாரணத்திற்கு நீங்கள் ஒரு விளாகர் (vlogger) என்றால் உங்களுடைய அன்றாட வாழ்க்கையை பற்றி வீடியோ எடுத்து பதிவிடுவீர்கள், அப்போது நிறைய பிராண்ட் உங்களை வந்தடையும், அதாவது சில அழகு சாதன பொருட்கள் அல்லது ஆடைகள், மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள், மொபைல்கள் போன்றவை உங்களுக்கு கிடைக்கும்.
காரணம் உங்கள் vlog வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் பார்க்கும்போது, சில நிறுவனங்கள் இதுபோன்ற ப்ராடக்ட் (பொருட்கள்) உங்களுக்கு கொடுத்து உங்கள் வீடியோவில் காட்டச் சொல்லுவார்கள், அப்போது நீங்கள் வீடியோவில் காண்பிக்கும் போது உங்களை பின்பற்றும் நபர்கள் அதை வாங்குவதற்காக முன் வருவார்கள்.
புரிகிறதா? அப்போது நிறுவனத்திற்கு அதிக விற்பனை நடக்கும், அதன் மூலம் அதற்கு லாபம் கிடைக்கும், அதனால் அந்த லாபத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அந்த நிறுவனம் முன்வரும். மேலும் நீங்கள் வீடியோவில் காட்டும் பொருளை உங்களுக்கு சொந்தமாக கொடுத்து விடும்.
இரண்டாவது வழி: இதில் இன்னொரு விதத்தில் நீங்கள் சம்பாதிக்கலாம், அதாவது அமேசான் Affiliate-program, பிலிப்கார்ட் Affiliate-program என்று கூறுவார்கள் (மேலும் நிறுவனங்கள் உள்ளது) அதன் மூலம் நீங்கள் Affiliate அக்கவுண்ட் உருவாக்கி (Affiliate Link மூலமாக) விற்பனை செய்யும் போது அதற்கென்று விற்பனை கமிஷன் எனப்படும் ஒரு பங்கு உங்களுக்கு கிடைக்கும்.
உதாரணத்திற்கு நூறு ரூபாய்க்கு ஒரு பொருளை உங்கள் Affiliate Link மூலம் ஒருவர் வாங்கினால், அதில் உங்களுக்கு 10 முதல் 15 ரூபாய் கமிஷனாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, இது குறிப்பிட்டு பொருளை பொறுத்து மாறுபடும் என்பது உண்மை.
நீங்கள் ஒரு விலாகராக என்ன தேவை?
இதன்னை நம் கட்டுரையில் ஆரம்பத்திலே படித்து விட்டோம் (விவாதிடத்தோம்) அதாவது முதலில் நீங்கள் பிற விலாகர் சேனல்களை பின்பற்ற வேண்டும், அவர்கள் எவ்வாறு வீடியோக்கள் உருவாக்குகிறார்கள் என்று அவர்களிடமிருந்து ஒரு ஐடியாவை பெற்றுவிட்டு, உங்கள் சொந்த முயற்சியில், (அதாவது காப்பியடிக்காமல்) தனித்துவமான வீடியோவை உருவாக்கி பிறரை கவர்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
அனைவரையும்விட வித்தியாசமாகவும், தனித்திருமையுடனும், அழகான முறையில் பிரதிபலிக்கும் வகையிலும் உங்கள் வீடியோ இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விலாகராக மாற என்னென்ன பொருட்கள் தேவை?
ஓன்று: தற்போது உள்ள காலத்தில் மொபைல் மூலமே நீங்கள் வீடியோவை எடுக்கலாம், மொபைல் மூலம் எடுக்கப்படும் வீடியோவை மிகவும் சிறப்பாக இருக்கின்றது.
இரண்டு: மேலும் உங்களுக்கு ஒரு நல்ல கேமரா ஸ்டாண்ட் தேவைப்படலாம், மேலும் நீங்கள் செல்லும் இடங்களில் நடந்துகொடு வீடியோ எடுப்பதற்காக ஒரு கேமரா ஸ்டிக் உங்களுக்கு தேவைப்படலாம், அதைக் கொண்டும் நீங்கள் வீடியோவை உருவாக்க முடியும்.
மூன்று: ஆரம்ப காலத்தில் நிறைய இலவசமாக வீடியோ எடிட்டிங் செய்யும் அப்ளிகேஷன்கள் உள்ளது, அதில் கையின் மாஸ்டர், பவர் டைரக்டர் எனப்படும் அப்ளிகேஷன்கள் மிகவும் பிரபலம், இதில் இலவசமாக கிடைக்கும் விஷயத்தை கொண்டு நல்ல திறமையான வீடியோவை உருவாக்கலாம்.
கவனிக்க: வருங்காலத்தில் வருமானம் வர துவங்கிவிட்ட பிறகு, அதாவது உங்கள் வீடியோக்கல் மூலம் வருமானம் ஈட்ட துவங்குகிய பிறகு நீங்கள் செலவு செய்து பிரீமியம் எடிட்டிங் அப்ளிகேஷன்கள் மூலம் எடிட் செய்யலாம், மேலும் டி எஸ் எல் ஆர் கேமராக்களை வாங்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More Details for:
English | Tamil |
---|---|
Camera | புகைப்பட கருவி |
Tripod or Stabilizer | முக்காலி அல்லது நிலைப்படுத்தி |
Microphone | ஒலிவாங்கி |
Lighting | விளக்கு |
Video Editing Software | வீடியோ எடிட்டிங் மென்பொருள் |
Computer | கணினி |
Memory Cards | நினைவக அட்டைகள் |
Backdrop or Location | பின்னணி அல்லது இடம் |
Props and Accessories | பொருட்கள் மற்றும் பாகங்கள் |
Script or Outline | ஸ்கிரிப்ட் அல்லது அவுட்லைன் |
Release Forms | வெளியீட்டு படிவங்கள் |
Thumbnail and Graphics | சிறுபடம் மற்றும் கிராபிக்ஸ் |
யாரெல்லாம் Vlogger ஆவதற்கு தகுதியானவர்கள்?
இந்த கேள்வி மிகவும் எளிமையானது! அதாவது யாருக்கெல்லாம் ஆர்வமும், திறமையும் உள்ளதோ அவர்கள் அனைவருமே விலாகர் ஆவதற்கு தகுதியானவர்கள் தான். உதாரணத்திற்கு உங்களுக்கு ஆர்வம் இருந்தால் போதும், திறமையை தானால் வளர்த்துக் கொள்ளலாம்.
ஆகையால் உங்களுக்கு விருப்பம் இருந்தால் கட்டாயம் நீங்கள் Vlogger-ஆக முடியும், உங்களுக்கான பேச்சுத் திறமையும் மற்றும் அழகான முறையில் (டெடிகேட்டாக) உங்கள் வீடியோவை வழங்கும் தன்மையும் இருந்தால் போதுமானது.
குறிப்பு: அவரவருக்கென்று கடவுள் ஒரு தனித்துவமான திறமையை தந்திருப்பார், ஆகையினால் அந்த திறமையை கண்டுபிடித்து சிறந்த Vlogger ஆவதற்கு முயற்சி செய்யுங்கள்.
உங்களோடு சில சுருக்கமான உரையாடல்: விலாகர் என்றால் என்ன (vlog meaning in tamil) என்ற கேள்விக்கான சிறந்த பதிலை எங்கள் கட்டுரையில் கொடுத்திருப்போம் என்று நம்புகிறோம், இவை அனைத்தும் உங்களுக்கு திருப்தியாக இருந்திருக்கும் என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கின்றது.
ஒருவேளை சந்தேகம் இருந்தால் கட்டாயம் எங்கள் கட்டுரையில் கீழே உள்ள கருத்து பட்டியல் பதிவிடுங்கள், அதற்கான பதிலை விரைவில் கொடுப்போம், அந்த பதிலில் உங்களுக்கான சந்தேகத்தை மேலும் முழுமையாக தீர்க்கவும் முயற்சிப்போம்.
மேலும் இந்த கட்டுரையில் நாங்கள் முடிந்த அளவு 100% தகவலை இணைத்து இருக்கிறோம் என்று நம்புகிறோம், படித்துப் பார்த்த நீங்கள் கூறும்போது தான் அதை நாங்கள் உறுதி செய்ய முடியும் என்பதை தெரிவித்துக் கொண்டு அடுத்த கட்டுரையை நோக்கி பயணிக்கிறோம் உங்கள் வாசிப்பிற்கு நன்றி.
vlog definition and example Pdf Download
For most of your doubts, use
Vlog Meaning in English
An experienced web writer with extensive experience and the ability to interpret meanings in multiple languages